புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பேருந்து

வடக்கு பிரான்ஸில் உள்ள பேருந்துகளில் பயணிப்பவர்களில் எத்தனை பேர் ’புலம்பெயர்ந்தவர்கள்’ என கண்காணிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. வடக்கு பிரான்ஸில் உள்ள Twisto என்ற பேருந்து சேவை நிறுவனம், புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை கண்காணித்து வருகிறது.

இதன் மூலம், Caen என்ற பகுதியில் இருந்து Ouistréham ferry terminal என்ற பகுதிக்கு செல்லும் பேருந்துகளில் அதிகளவில் புலம்பெயர்ந்தவர்கள் பேருந்துகளில் பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் இந்த வழியாக பிரித்தானியாவுக்கு சென்று குடியேற முயல்வதும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, Twisto முதலாளிகளிடம் பொலிஸ் தலைமையகம் தான் கேட்டுக்கொண்டதாக பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், புலம்பெயர்ந்தவர்கள் இறங்கும் பேருந்து நிறுத்தங்களை வைத்து, புலம்பெயர்ந்தவர்களின் இருப்பிடங்களை கண்டறிந்து கூறவும் ஓட்டுனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடவடிக்கையில் சில ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் ஈடுபாடு இல்லை. மேலும் சிலர் இந்த கண்காணிப்பு வேலையை செய்யமாட்டோம் என மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறிய புகாரின் பேரில் Committee for Hygiene, Security and Working Conditions (CHSCT) என்ற அமைப்பிடம் தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொலிஸ் அதிகாரி Laurent Fiscus, தான் Twisto நிறுவனத்துக்கு இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய இதுபோன்ற தகவல்கள் அதிகாரிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தை அவர் மறுக்கவில்லை. அவர் அதுபற்றி கூறுகையில், பொது போக்குவரத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் புலம்பெயர்ந்தவர்கள் அல்லது மற்ற பிரச்சனைகள் தொடர்பான தகவல்களை வழங்கலாம். அவை தேசிய மற்றும் மாநகர பொலிசாருக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். கடந்த சிலமாதங்களாக புலம்பெயர்ந்தவர்கள், படகு மூலமாகவோ அல்லது Calais நகரில் இருந்து Channel train மூலமாகவோ வேறு இடங்களுக்கு செல்ல முயல்வதில்லை.

ஏனெனில் அங்கு தற்போது பாதுகாப்பு அதிகளவில் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தற்போது வடக்கு பிரான்ஸில் உள்ள மற்ற துறைமுகங்கள் மற்றும் கடலோர நகரங்கள் மூலம் பிரித்தானியாவுக்கு செல்ல முயல்வது தெரியவந்துள்ளது.

சேவைநிறுவனம்பயணிகள்பிரான்ஸ்புலம்பெயர்ந்தவர்கள்பேருந்துவடக்கு
Comments (0)
Add Comment