புலிகள் இல்லை ஆனால் இருக்கு என்கின்றது சிங்கள புலனாய்வு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளர் மாதுளுவாவே சோபித தேரர் ஆகியோர் உயிராபத்தை எதிர்நோக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் இருவரும் உயிராபத்தை எதிர்நோக்கியிருப்பது குறித்து புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் தகவல் வழங்கியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ள போகும் பயங்கரமான விபத்தொன்று குறித்த தகவலையே தாம் இவ்வாறு அறிய தந்ததாக அந்த புலனாய்வு பிரிவின் அதிகாரி கூறியுள்ளார்.

மாதுளுவா சோபித தேரர் கடந்த 22 ஆம் திகதி வாகன விபத்தொன்றை சந்தித்தமை திடீரென நடந்த சம்பவம் அல்ல எனவும் அது பயங்கரமான விபத்தை ஏற்படுத்துவதற்கான முன் பயிற்சி எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சரான ஸ்ரீபதி சூரியாராச்சியின் மரணமும் இவ்வாறு சதித்திட்டம் போட்டு மேற்கொள்ளப்பட்ட விபத்து என தெரியவந்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டை புகைப்படம் எடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

அவரை கொலை செய்ய முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டார் என்ற செய்திகள் இராணுவ புலனாய்வு பிரிவின் ஆலோசனைக்கு அமையவே முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்களில் வெளியிடப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்னும் விடுதலைப் புலிகளின் இலக்கில் இருப்பதாக காட்டுவதே இதன் நோக்கம்.

முன்னாள் ஜனாதிபதிக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, அவரை கொலை செய்து விடுதலைப் புலிகளே அதற்கு காரணம் என காட்டுவதற்காக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரின் ஆலோசனையின்படி சில குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.

அத்துடன் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளான மங்கள சமரவீர மற்றும் கலாநிதி ஹர்ச டி சில்வா ஆகியோர் தொடர்பிலும் இந்த குழுக்கள் விசேட கவனத்தை செலுத்தியுள்ளன என்றும் அந்த புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு தலையிடியாக மாறியுள்ள இணையத்தளங்களை நடத்தி வரும் சில ஊடகவியலாளர்களை இந்த குழுக்கள் கண்காணித்து வருகின்றன.

லண்டனில் தஞ்சமடைந்துள்ள லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவான் சேனாதீர, தி இண்டிபென்டன் ஆசிரியர் சுபாஸ் ஜயவர்தன ஆகியோர் இவர்களில் பிரதான இலக்காகும்.

லண்டனில் இருந்து பதிவேற்றப்படும் இணையத்தளங்களின் தகவல்களை சேகரிப்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவின் மேஜர் ஆர்.பீ.டி.பத்திரண என்ற அதிகாரியை எதிர்வரும் 23ம் திகதிக்கு பின்னர் லண்டனில் களமிறக்க ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த புலனாய்வு பிரிவின் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எடுத்தவர்குமாரதுங்கவின்கைதுசந்திரிக்காசெய்யப்பட்டார்.ஜனாதிபதிபண்டாரநாயக்கபுகைப்படம்முன்னாள்வீட்டை
Comments (0)
Add Comment