பூமியை பிளந்து கொண்டு திடீரென சீறி பாய்ந்த நீர்….

உக்ரைன் நாட்டில் பூமிக்கடியில் போடப்பட்டிருந்த ராட்சத குடிநீர் குழாய் திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராட்சத குடிநீர் குழாய் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால் உயர் அழுத்தத்தால் அது வெடித்து சிதிறியுள்ளது என்று கூறுகிறார்கள்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் திடீரென பூமிக்கு அடியில் இருந்த குழாய் வெடித்து சிதற தார் சாலை பிளந்து நீர் மற்றும் மண் பயங்கரமாக வெளியேறுகிறது. இதில் அப்பகுதிக்கு அருகே இருந்த வீடுகளும், கார்களும் சேதமடைந்துள்ளன.

அதிர்ஷ்டவசமாக இதில் ஒருவருக்கு கூட பாதிக்கப்படவில்லை. சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைன்பொலிசார்ராட்சத குடிநீர் குழாய்
Comments (0)
Add Comment