பெண்ணின் உடலை ஆறு மணி நேரம் காவல் காத்த பாச நாய்கள்!

வீதியில் துவிச்­சக்­கரவண்­டி யில் சென்ற வேளை மர­ண­ம­டைந்து விழுந்த வயோ­திபப் பெண்­ம­ணியின் உடலை அவரால் பரா­ம­ரிக்­கப்­பட்ட 8 தெரு நாய்­களும் சூழ்ந்­தி­ருந்து காவல் காத்த நெஞ்சை நெகிழவைக்கும் சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.
தென் கிழக்கு சீனாவில் ஸின்யு நகரில் ஜியாங்ஸி பொறி­யியல் நிறு­வ­கத்­துக்கு அரு­கி­லுள்ள வீதியில் துவிச்­சக்­கர வண்­டியில் சென்றுகொண்­டி­ருந்த வேளை குறிப்­பிட்ட பெண்­மணி உடல்நலப் பாதிப்பால் கீழே விழுந்து இறந்­துள்ளார்.
இந்­நி­லையில் அவரால் கடந்த பல வரு­டங்­க­ளாகப் பரா­ம­ரிக்­கப்­பட்டு வந்த 8 தெரு நாய்­களும் அவரைச் சூழ்ந்­திருந்து 6 மணித்­தி­யா­ல­மாக நக­ராது காவல் காத்துக் கொண்­டி­ருந்­துள்­ளன.
எவ­ரது உத­வி­யு­மின்றி தனித்து வாழ்ந்த அந்தப் பெண்­மணி, அந்தத் தெருநாய்­களை தனது பிள்­ளைகள் போன்று அன்பு காட்டி பரா­ம­ரித்து வந்­துள்ளார் அவர் குப்பை சேக­ரிப்­பதன் மூலம் தனக்குத் தேவை­யான வரு­மா­னத்தை ஈட்டிவந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.
காலை 4.00 மணி­யி­லி­ருந்து 10.00 மணி வரை கவ­னிப்­பா­ரற்று அவ­ரது சடலம் வீதியில் கிடந்­துள்­ளது.
இந்த சம்­பவம் அந்­நாட்டு பொலி­ஸா­ர தும் அவ­ச­ர­சேவைப் பிரி­வி­ன­ரதும் அலட்­சியப்போக்கு தொடர்பில் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குப்பைசீனாநாய்கள்பலிபாசம்பாதுகாப்புபெண்வீதி
Comments (0)
Add Comment