பெல்ஜியம் தாக்குதலின் முக்கிய குற்றவாளி கைது!

பெல்­ஜியம் தலை­நகர் பிர­ஸல்ஸில் 35 உயிர்­களை பறித்த ஸவன்டெம் விமான நிலைய தாக்­கு­தலை நடத்­திய தற்­கொ­லைப்­படை தீவி­ர­வா­திகள் அடை­யாளம் தெரிந்­துள்­ள­தாகவும் விமான நிலைய தாக்­கு­த­லுக்கு மூளை­யாக செயல்­பட்ட முக்­கிய நபர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பெல்­ஜி­யத்தை சேர்ந்த ஊடகம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

நேற்­று­முன்­தினம், விமான நிலை­யத்­துக்கு ஒரு வாடகைக் காரில் வந்த 3 தீவி­ர­வா­திகள் தனித்­த­னி­யாக பிரிந்து தங்கள் கையில் இருந்த பயணப் பொதி­களை வெவ்­வேறு ‘தள்ளு வண்­டி­களில் வைத்து புறப்­பாட்டு பகு­தியின் வர­வேற்பு கூடத்­துக்கு தள்ளிச் சென்­றனர். கையுறை அணிந்­தி­ருந்த அவர்கள் தோள்­களில் மாட்­டி­யி­ருந்த கைப்­பை­களில் வெடி­குண்­டுகள் இருந்­துள்­ளன.

முதலில் 3 பேர்­களில் இருவர் மட்டும் பைகளில் இருந்த குண்­டு­களை வெடிக்க வைத்­துள்­ளனர். இன்­னொ­ருவன் பயந்து போய் குண்டை இயக்கி, வெடிக்க வைக்­காமல் அங்­கி­ருந்து ஓடி­யி­ருக்­கக்­கூடும் என கரு­தப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் பெல்­ஜியம் காவல்­துறை நாஜிம் லாச்­ரோவி என்ற தீவி­ர­வா­தியை கைது செய்­துள்­ளனர். ஆண்­டர்லெச்ட் மாவட்­டத்தில் நாஜிம் கைது செய்­யப்­பட்­டுள்ளான். விமான நிலைய சி.சி.சி.டி. கேம­ராவில் பதி­வான மூன்று நபர்­களில் ஒருவன் நாஜிம் லாச்­ரோவி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. நாஜிமின் கைது, இந்த தாக்­கு­தலில் தொடர்ப்­பு­டை­ய­வர்­களை கண்­டு­பி­டிக்க உதவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரஸல்ஸ் விமான நிலை­யத்தில் நடந்த தற்­கொலைப் படை தாக்­கு­தலில் ஈடு­பட்­ட­வர்கள் சகோ­த­ரர்கள் எனவும் தெரி­ய­வந்­துள்­ளது. பெல்­ஜியம் தலை­நகர் பிரஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலை­யத்­திலும் மெட்ரோ ரயில் நிலை­யத்­திலும் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அடுத்­த­டுத்து நிகழ்த்­தப்­பட்ட தொடர் வெடி­குண்டுத் தாக்­கு­தலில் 34 பேர் உடல் சிதறி பலி­யா­னார்கள். இந்தத் தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு பொறுப்­பேற்றுக் கொண்­டுள்­ளது.

இந்­நி­லையில் பிரஸல்ஸ் விமான நிலை­யத்தில் தாக்­கு­தலில் ஈடு­பட்ட காலித், பிராஹிம் எல் பக்­ராவி ஆகிய இரு­வரும் குற்றப் பின்­னணி கொண்ட சகோ­த­ரர்கள் என அந்­நாட்டின் அரசு செய்­திகள் தெரி­வித்­துள்­ளது. காலித் பெல்­ஜிய தலை­நகர் பிர­ஸல்ஸில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்­த­தா­கவும், ஒதுக்­குப்­பு­ற­மான பகு­தியில் அமைந்­தி­ருந்த அந்த வீட்டில் கடந்த வாரம்தான் பொலிஸார் அதி­ரடி சோதனை மேற்­கொண்­டனர் என்றும் அந்த செய்தித் தொகுப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், அந்த வீட்டில் ஐ.எஸ். கொடி, சில துப்­பாக்­கிகள் மற்றும் கடந்த வாரம் கைதுசெய்­யப்­பட்ட பாரிஸ் தாக்­குதல் முக்­கிய குற்­ற­வா­ளி­களில் ஒரு­வ­ரான சலா அப்­டேஸ்­லாமின் கைரேகை ஆகி­யன பொலிஸார் நடத்­திய அதி­ரடி சோத­னையில் சிக்­கி­ய­தாக அச்­செய்­தியில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பிரஸல்ஸ் விமான நிலைய இர­க­சிய கெம­ராவில் பதி­வான காட்­சி­களில் காலிதும் அவ­ரது சகோ­தரர் எல் பக்­ரா­வியும் நடந்­து­வரும் காட்­சிகள் பதி­வாகி உள்­ளது. மூன்­றா­வது நப­ரான நஜீம் லாச்­ரோ­வியை பொலிஸார் தேடி வரு­கின்­றனர்.

பாரிஸ் தாக்­கு­தலில் தொடர்­பு­டைய முக்­கிய தீவி­ர­வா­தி­களில் ஒரு­வ­னான சலா அப்­துஸ்­ஸலாம் என்ற தீவி­ர­வா­தியை பிடிக்க பிரஸல்ஸ் நகரில் சில சந்­தே­கத்­துக்­கு­ரிய வீடு­களில் பொலிஸார் சமீ­பத்தில் அதி­ரடி சோதனை நடத்­தினர். அவற்றில் ஒரு வீட்டில் குடி­யி­ருந்த காலித் பக்­ரோவி மற்றும் அவ­னது தம்­பி­யான பிராஹிம் அல் பக்­ரோவி ஆகியோர் நேற்­று­முன்­தினம் ஸவன்டெம் விமான நிலைய தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக பொலிஸார் கண்­டு­பி­டித்­துள்­ளனர் என பெல்­ஜியம் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே சில குற்றச்செயல் வழக்குகளில் தொடர்புடைய வர்கள், எனினும், இவர்கள் மீது தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான எந்த குற்றச் சாட்டும் இதற்கு முன் னர் வந்ததில்லை எனவும் அந்த செய்தி கள் குறிப்பிடுகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ்.குற்றவாளிகைதுதற்கொலைத்தாக்குதல்பாரிஸ்பிரான்ஸ்பெல்ஜியம்விமான நிலையம்
Comments (0)
Add Comment