இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள் அந்த சிறுவன் வேனை ரெயில்வேயின் ஆள் இல்லாத கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக பத்திரமாக ஓட்டி சென்று அங்குள்ள பிரபல வணிக வளாகத்தை அடைந்தனர்.
அங்கு தனது தங்கையுடன் அமர்ந்து பாலாடை கட்டி பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இதற்கிடையே அங்கு சென்ற போலீஸ் அதிகாரி கோச்லர் வேன் ஓட்டி வந்த சிறுவனை கண்டதும் நிம்மதி அடைந்தார்.
ஏன் வேன் ஓட்டி வந்தாய்? என கேட்டார். அதற்கு அவன் எங்களுக்கு பாலாடை கட்டியுடன் கூடிய பர்கர் சாப்பிட ஆசையாக இருந்தது. ஆனால் எனது அம்மா, அப்பா ஆகியோர் நன்றாக தூங்கி கொண்டிருந்தனர்.
எனவே நான் வீட்டில் இருந்த எனது தங்கையை அழைத்துக் கொண்டு தந்தையின் வேனை ஓடி வந்தேன் என்றான். வேன் ஓட்ட எப்படி கற்றுக் கொண்டாய் என கேட்டதற்கு யூடியூப் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறினான்.