மதமாற்றத்திற்கு தயாராகுங்கள் அல்லது மரணத்திற்கு தயாராகுங்கள் – ஐ.எஸ்.ஐ.எஸ்.

ஈராக் நாட்டில் உள்நாட்டுக் கலவரம் மூண்டதையடுத்து அந்நாட்டின் பல்வேறு நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி வருகின்றனர். அதில் முக்கியமானது கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மொசுல் பகுதி. அங்குள்ள கிறிஸ்தவர்களை மதமாற்றத்திற்கு தயாராகுங்கள் அல்லது மரணத்திற்கு தயாராகுங்கள் என ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மொசுலில் உள்ள பல்வேறு பொருட்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. அதே போல் மொசுல் நகருக்கு தெற்கே 15 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான மடத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கிளர்ச்சி ஏற்படுவதற்கு அந்நாட்டில் பெரும்பகுதி மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அங்கு நாள்தோறும் மோதல் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கின்றது. அந்நகரில் வசிக்கும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.

. அங்குள்ளஅதிகம்அல்லதுஎச்சரிக்கைஎனஐ.எஸ்.ஐ.எஸ்.கிறிஸ்தவர்களைகிறிஸ்தவர்கள்கிளர்ச்சியாளர்கள்தயாராகுங்கள்பகுதிமதமாற்றத்திற்குமரணத்திற்குமொசுல்வசிக்கும்விடுத்துள்ளனர்
Comments (0)
Add Comment