அந்தப் பதவி இப்போது நடைமுறையில் இல்லாத சூழலில், சுல்தான் ராஜா நூர் ஜன் ஷா ராஜா துவாஹ் எனும் அந்த நபர் இல்லாத அந்தப் பதவியை பயன்படுத்தி பலருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கியுள்ளார்.
தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை கைது செய்துள்ள காவல்துறையினர், போலிப் பட்டங்கள் வழங்க அவருக்கு யாராவது பணம் கொடுத்தார்களா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
தன்னை சுல்தான் என்று கூறிக் கொள்ளும் நூர் அவர்கள், மஞ்சள் வண்னத்தில் இராணுவத்தினர் அணிவது போல உடையணிந்து அதில் ஏராளமான பதக்கங்களை குத்திக் கொண்டுள்ளார். மேலும் பலருக்கு கௌரவப் பட்டம் வழங்கும் வகையில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளையும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
சுல்தான்-அலங்காரப் பதவி
மலேசியாவின் ஒன்பது மாகாணங்களில் அங்குள்ள அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுல்தான்களாக இருந்து ஆண்டு வருகின்றனர்.
அவர்களில் ஒருவர், சுழற்சி முறையில், ஐந்து ஆண்டு காலப்பகுதிக்கு மலேசியாவின் அரச தலைவராக செயல்படுவார்.
எனினும் தற்போது மலாக்கா மாகாணத்துக்கு ஆளுநர் ஒருவரே தலைவராக இருக்கிறார்.
புதன்கிழமையன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நூர் எனப்படும் அந்த நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் வீடுகளை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடும் ஒரு வர்த்தகர் என்று தெரியவந்துள்ளது என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.
மலேசிய சுல்தான்கள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கானவர்களுக்கு கௌரவப் பட்டங்களை வழங்கும் ஒரு வழக்கம் அங்குள்ளது. மலேசியாவில் சுல்தான்கள் என்பது ஒரு அலங்காரப் பதவியாக இருந்தாலும், மிகவும் மதிக்கப்படுகின்ற ஒரு பதவியாக உள்ளது.