மலேசியா அருகே படகு விபத்து 13 சடலங்கள் மீட்பு!

மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகூரில் உள்ள பந்தார் பெனாவர் கடற்கரையோரம் நேற்று காலை 13 பேரின் உடல்கள் கரை ஒதுங்கி கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இறந்தவர்களின் உடமைகளில் இருந்து இந்தோனேஷிய நாட்டின் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன. எனவே, இவர்கள் அனைவரும் இந்தோனேஷியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் மலேசியாவில் நுழைவதற்காக படகு மூலம் பயணம் செய்து இருக்கலாம் என்றும், அப்போது படகு பலத்த கடல் அலையில் சிக்கி கவிழ்ந்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்த படகில் மொத்தம் 35 பேர் வரை பயணம் செய்திருப்பதையும் மலேசியா போலீசார் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து படகு எங்கு கவிழ்ந்தது, படகில் பயணம் செய்த மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து மலேசிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருகேசடலங்கள்படகுமலேசியாமீட்புவிபத்து 13
Comments (0)
Add Comment