மஹிந்த அரசாங்கம் பதவியில் தொடர்ந்திருப்பதை விரும்பும் சீன அரசாங்கம்

ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் சீனா அக்கறை காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலையில் சீன அரசாங்கத்தின் பெருமளவான முதலீடுகள் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், புதிய அரசாங்கமொன்று அமையும் பட்சத்தில் இந்த முதலீடுகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று சீனா அஞ்சுகிறது.

இதனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவியில் தொடர்ந்திருப்பதை விரும்பும் சீன அரசாங்கம், எதிர்வரும் தேர்தலில் அவரது வெற்றிக்கு பின்புல பங்களிப்பை வழங்கத் தயாராகியுள்ளது. இதன் ஒரு கட்டமாக இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியளிக்க சீனா முன் வந்துள்ளது. சைபர் தாக்குதல்கள் மற்றும் இணையத்தள பாவனை தொடர்பான ஒப்பந்தமொன்றிலும் இரு நாடுகளும் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்நிலையில் அரசாங்கத்தின் வெற்றிக்காக உழைக்கவுள்ள முக்கிய பிரிவினரான நாமல் ராஜபக்ஷவின் நில் பலகாய (நீலப்படையணி) வுக்கும் சீன அரசாங்கத்தின் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நீலப்படையணி உறுப்பினர்களின் சீருடைக்கான துணிகள் சீன அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இந்தத் துணிகள் மூலம் சுமார் இரண்டரை லட்சம் பேருக்கு நீலப்படையணி இலச்சினை பொறித்த டீ-சேர்ட்டுகள் தைத்து வழங்கப்படவுள்ளது. சீன அரசாங்கம் இலவசமாக வழங்கிய துணிகள் விசேட விமானமொன்றில் எடுத்து வரப்பட்டு, ஆறு தைத்த ஆடைகள் உற்பத்தி நிறுவனங்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் நீலப்படையணி உறுப்பினர்கள் அனைவருக்கும் சீருடைக்கான டீ-சேர்ட் தயாரித்து வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்கறைஅச்சம்அரசாங்கம்சீனாசீருடைஜனாதிபதிதேர்தல்பாதிப்பு.மகிந்த ராஜபக்சமுதலீடுவெற்றி
Comments (0)
Add Comment