இந்தியாவின் தென்மேற்கே அமைந்துள்ள மாலத்தீவு நாட்டில், அண்மையில் அதிபரை கொல்ல சதி நடந்தது. இதுதொடர்பாக துணை அதிபர் கடந்த 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டதால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.
அதேநேரத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி ஒன்றையும் உல்லாச விடுதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களையும் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், மாலத்தீவு நாட்டில் தற்போது அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, ரோந்துப் பணியும் சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.