மினாவில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு

மெக்கா அருகே மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 863 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 கடந்த 21ம் தேதி ஹஜ் புனித பயணம் தொடங்கியிருப்பதால், உலகம் முழுவதும் இருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் குவிந்துள்ளனர். மெக்கா அருகேயுள்ள மினாவில், ஹஜ் யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 863 பேருக்கும் அருகேயுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

 மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க் கால அடிப்படையில் நடைபெறுகின்றன. மினா நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மலேஷியா, இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.

717 ஆக உயர்வுஉயிரிழப்புகூட்ட நெரிசல்தீவிர சிகிச்சைமினாமெக்காஹஜ் யாத்திரை
Comments (0)
Add Comment