மியான்மர் தேர்தலில் வென்றால் அதிபரை விட கூடுதல் அதிகாரத்தில் இருப்பேன் : ஆங் சாங் சூச்சி

மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெறும் பட்சத்தில் அதிபரை விட கூடுதல் அதிகாரம் பெற்றவராக இருப்பேன் என ஆங் சாங் சூச்சி தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்தில் இதைத் தடுக்க வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டு்ள்ளார்.

 வெளிநாட்டைச் சேர்ந்தவரை மணம் செய்து கொண்டிருப்பதாலும், அவரது இரு குழந்தைகளும் மியான்மர் குடியுரிமை பெறாததாலும், அரசியல் சட்டப்படி ஆங் சாங் சூச்சி அதிபராகத் தடை இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 வரும் எட்டாம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் சூச்சி தலைமையிலான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் அதிக இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல இடங்களில் தேர்தல் நடவடிக்கையில் முறைகேடு நடப்பதாக புகார் வந்துள்ளதாகவும், இதனைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டதாகவும் சூச்சி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிகாரம்அதிபராகத் தடைஅரசியல் சட்டம்ஆங் சாங் சூச்சிமியான்மர் தேர்தல்
Comments (0)
Add Comment