லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது என்ற நிலையில், மிஷல் ஒபாமா போட்டியிடுவாரா என்று கேட்கப்பட்டதற்கு அதிபர் ஒபாமா இவ்வாறு பதிலளித்தார்.
உடல் பருமனுக்கு எதிரான பணிகளில் மிஷல் கவனம் செலுத்தி வருவதாக கூறிய அவர், வாழ்க்கையில் 3 விஷயங்கள் நிச்சயம் என்று கருதுவதாகவும் கூறினார். இறப்பு, வரி விதிப்பு மற்றும் அதிபர் பதவிக்கு மிஷல் போட்டியிட மாட்டார் என்பவை அவை என்று ஒபாமா விளக்கினார்.