மேலும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதியில் மீன் பிடிப்பது குறித்து இருநாட்டு மீனவர் நலனையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஹிஷினி கொலோன் கூறியுள்ளார்.
இலங்கைக் கடற்பகுதியில் ஓர் ஆண்டுக்கு ஒருமுறை தமிழக மீனவர்கள் 65 நாட்கள் மீன்பிடிக்க இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசு கோரியிருந்தது. இதற்கு இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்தா அமரவீரா மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மஹிஷினி கொலோன் இவ்வாறு பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.