கடந்த 2013-ம் ஆண்டு, அதிபர் வசிக்கும் அலறி மாளிகைக்கு, பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்து பிரம்மாண்டமான காலை ராஜவிருந்துக்கு உணவு அனுப்பப்பட்டுள்ளது. இந்த உணவுக்கான செலவுத் தொகை 94 லட்ச ரூபாயாகும். இந்த ஆதாரத்தை வெளியிட்டு, ரனில் விக்கிரமசி்ங்கேயின் ஜக்கிய தேசிய கட்சி தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மேலும் மக்களின் வரிப்பணத்தில் ராஜபக்சேவின் ஆடம்பர வாழ்க்கை என அக்கட்சியின் மூத்தத் தலைவர் நலீன் பண்டாரா பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். ஆனால், இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ராஜபக்சே, காமன்வெல்த் மாநாட்டின் போது தலைவர்களுக்காக வாங்கப்பட்ட உணவின் செலவுதான் 94 லட்ச ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். இந்த உணவிற்கும் தமது குடும்பத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.