முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடமில்லை: சம்பந்தன் திட்டவட்டம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் இடமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையே வவுனியாவில் நடைபெற்ற பேச்சுவார்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

மேலும் முன்னாள் போராளிகளை கூட்டமைப்புக்குள் சேர்த்துக்கொள்வதால் இலங்கையிலும், சர்வதேச மட்டத்திலும் சிக்கல் நிலையை உருவாக்கும் என சம்பந்தன் தெரிவித்தாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.

இதனிடையே தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேச நாடுகளில் பேசப்பட்டுவரும் நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை கூட்டமைப்புக்குள் இணைத்துக்கொள்வது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இடமில்லைசம்பந்தன்சிக்கல் நிலைஜனநாயக போராளிகள் கட்சிதமிழ் தேசிய கூட்டமைப்புபோராளிகள்விடுதலைப்புலி
Comments (0)
Add Comment