முறுகலை தீர்க்க ஐக்கிய அரபு இராச்சிய குழுவினருடன் சிறீலங்கா பேச்சு வார்த்தை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் அமைச்சர் மற்றும் குழுவினருடன் அவசர பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் பணியாட்களை வேலைக்கு அனுப்புவது தொடர்பாக ஏற்பட்டுள்ள முறுகலை அடுத்தே இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உடன்படிக்கையில் உள்ள சில விடயங்களை இலங்கையின் சட்டத்திட்டங்களுக்கு அமைய நடைமுறைப்படுத்த முடியாமை காரணமாக இந்த முறுகல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பணியாட்களை அனுப்புவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.இதற்கிடையில் உடன்படிக்கையில் இந்த ஏற்றுக்கொள்ளமுடியாத அம்சங்கள் என்ன என்பது வெளியிடப்படவில்லை.எனினும் ஏற்கனவே இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை உறுதியாக கடைப்பிடிக்கப்பட்டதாக இலங்கை தெரிவித்துள்ளது.

அமைச்சர்அரசாங்கம்அரபுஅவசரஇராச்சியத்தின்இலங்கைஐக்கியஒன்றைகுழுவினருடன்கோரிக்கைதொழில்நடத்துவதற்குபேச்சுவார்த்தைமற்றும்
Comments (0)
Add Comment