மூதூர் படுகொலைச் சம்பவம் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் – பிரான்ஸ்.

மூதூர் படுகொலைச் சம்பவம் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 17 தன்னார்வ தொண்டர்கள் கடந்த 2006ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதி, படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளார்.குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த தடையாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை பாதுகாவலர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது எனவும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் தன்னார்வ தொண்டர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்குமாறு பல சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தண்டனைதன்னார்வ தொண்டு நிறுவனத்தின்மூதூர் படுகொலை
Comments (0)
Add Comment