இதில், 4-வது மாடியின் ஒரு அறையில் தாயும், 3 குழந்தைகளும் சிக்கிக் கொண்டனர். ஜன்னல் வழியாக கீழே உள்ளவர்களிடம் அந்த தாய் உதவி கேட்டு கத்தினாள். கீழே இருந்தவர்கள் குழந்தைகளை வெளியே எறியும் படி கூறினர்.
இதையடுத்து 3 குழந்தைகளையும் கீழே எறிந்த தாய், அதனை தொடர்ந்து தானும் கீழே குதித்தாள். அனைவரும் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்க இராணுவ வீரர்கள் இவர்களை காப்பாற்றியுள்ளனர். இந்த காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது.