மைத்திரியின் ஆடையால் விமல் வீரவன்ச சர்ச்சை

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது தேர்ந்தெடுத்துள்ள ஆடை இலங்கையருக்கு பொருத்தமான ஆடையல்ல என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன, கண்டி கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணியும் ஆடையை ஒத்த ஆடையை அணிந்திருந்தமை தொடர்பிலேயே இந்த விமர்சனத்தை அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாஸ, சந்திரிக்கா மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தமது அடையாளங்களை விட்டுக்கொடுக்கவில்லை. விசேட நிகழ்வுகளுக்காக ஆடைகளை மாற்ற முடியும். எனினும் உலக தலைவர்கள் தமது ஆடைகளை உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் போது மாற்றுவது இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர்ஆடைஇலங்கைசிறிசேனநரேந்திரமோடிபொது வேட்பாளர்மைத்திரிவிமல்வீரவன்ச
Comments (0)
Add Comment