யேமனின் தென்பகுதி நகரான முகல்லாவில் காவலர் தேர்வுக்காக வந்திருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு தாமே காரணம் என இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் குழு கூறியுள்ளது. அங்குள்ள காவல்துறை தலைமையகத்தில் காவலர் பணிக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.அல் கயீதா அமைப்பிடமிருந்து கடந்த மாதம்தான், முகல்லா நகரை யேமனின் அரச படையினர் கைப்பற்றியிருந்தனர்.