ரஷிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் நேட்டோ படைகள்

பால்டிக் நாடுகளில் ரஷிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் நேட்டோ படைகளை நிறுத்த அந்த அமைப்பு பரிசீலித்து வருகிறது.  

இதையடுத்து, பால்டிக் கடலில் அமைந்துள்ள எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகளில் சுழற்சி முறையில் நேட்டோ படையினர் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதுகுறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் திங்கள்கிழமை கூறியதாவது:  மேற்கு ஐரோப்பாவில் 4,200 வீரர்கள் அடங்கிய கவச வாகனப் படைப் பிரிவை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதைத் தவிர, நேட்டோ அமைப்பின் சார்பில் 4,000 வீரர்கள் அடங்கிய தரைப் படைப் பிரிவை எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய பால்டிக் நாடுகளிலும், போலந்திலும் சுழற்சி முறையில் நிறுத்துவது குறித்து நேட்டோ பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.  மேற்கு ஐரோப்பாவில் ரஷியாவின் ராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ வீரர்கள் அந்தப் பகுதியில் நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பால்டிக் பகுதியில் அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் பனிப் போர் காலத்து மனோநிலையில் ராணுவப் போட்டியை ஏற்படுத்துவதாக ரஷியா குற்றம் சாட்டி வருகிறது.

அச்சுறுத்தல்நாடுகள்நோட்டோபடைபரிசீலனைபால்டிக்ரஷியா
Comments (0)
Add Comment