ரஷ்யாவிற்கு எச்சரிக்கை: ஐரோப்பாவில் பயங்கர ஆயுதங்களை குவிக்க தயாராகும் அமெரிக்கா !

கிரீமியா விவகாரத்தை தொடர்ந்து ரஷ்யாவை எதிர்க்கொள்ளும் பொருட்டு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நாடுகளில் பயங்கர ஆயுதங்களை குவிக்க அமெரிக்கா தயாராகிவருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்ட பிறகு, ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. எனவே ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகளில் தன்னுடைய போர் வீரர்களையும், கனரக ஆயுதங்களையும் நிறுத்திவைக்க பெண்டகன் அனுமதி கோரியுள்ளது.

மேலும் இதற்கு பாதுகாப்பு செயலாளர் ஆஸ் கார்ட்டர் மற்றும் வெள்ளை மாளிகை அனுமதி கொடுக்கும் என கூறப்படுகிறது. சுமார் 5000 வீரர்களை அடங்கிய படைப்பிரிவை பால்டிக் நாடுகள் எனப்படும் லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா மற்றும் போலந்து, ருமேனியா, பல்கேரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளிலும் ஆயுதங்களை இருப்புவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் நிலவிய பனிப்போருக்கு பிறகு தற்போதுதான் ஐரோப்பிய நாடுகளில் பயங்கர ஆயுதங்களை அமெரிக்கா குவிக்க தயாராவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காஆயுதங்கள்உக்ரைன்ஐரோப்பாகிரீமியாநேட்டோ நாடுகள்ரஷ்யாவெள்ளை மாளிகை
Comments (0)
Add Comment