எல்விரா கரேவா என்ற மேற்படி பெண் உளவாளி ரஷ்யாவின் கோகஸஸ் பிராந்தியத்தில் செயற்படும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வளாகத்துக்குள் ஊடுருவி தீவிரவாதிகள் தொடர்பான உளவுத் தகவல்களை பல வருட காலமாக ரஷ்ய புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் வழங்கிய தகவல்கள் காரணமாக தமது குழுவைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர். அவர் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆளடையாளங்கள், அவர்கள் பதுங்கியுள்ள இடங்கள் மற்றும் தளங்கள் என்பன தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அவரது மரணதண்டனை நிறைவேற்றம் தொடர்பான செய்தி ஐ.எஸ். தீவிரவாதிகளின் ரஷ்ய மொழி இணையத்தளமான ஐஸ்ரொக் கில் வெளியிடப்பட்டுள்ளது.
“எல்விரா எமது சகோதர, சகோதரிகள் தொடர்பான தகவல்களை ரஷ்ய புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கி காட்டிக் கொடுப்பவராக செயற்பட்டுள்ளார்.
”அவர் வெட்கமின்றி ஜிஹாதிகளின் நம்பிக்கையைப் பெற்று அவர்கள் மத்தியில் ஊடுருவி திரைமறைவில் அவர்களது இடங்கள் மற்றும் தொடர்புகள் தொடர்பான தகவல்களைப் பெற்று வழங்கி அவர்கள் வேட்டையாடப்பட வழிவகை செய்துள்ளார்” என அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தான் ஏமாற்றி திருமணம் செய்த ஐ.எஸ். தீவிரவாத குழு உறுப்பினரான அபு முஸ்லிம்மை நஞ்சூட்டி படுகொலை செய்துள்ளதாக தீவிரவாதி கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எல்விரா ரஷ்ய புலனாய்வுப் பிரிவினருக்காக தான் பணியாற்றுவதை ஒப்புக்கொள்வதை வெளிப் படுத்தும் ஒலிநாடாவொன்றை ஐ.எஸ். தீவிர வாதிகள் கைப்பற்றியதையடுத்தே அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.