”ராஜபக்ச ஆட்சியில் மனித உரிமை மீறல்” நடைபெற்றதற்கு வலுவான ஆதாரங்கள் : இலங்கை அரசு அறிவிப்பு

ராஜபக்ச ஆட்சியில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கொழும்புவில் பேசிய அரசின் செய்தித்தொடர்பாளரும், அமைச்சருமான ரஜித சேனரத்னே, ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகள் மீதான வழக்குகளில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தெரிவித்தார்.

 மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் ரஜித சேனரத்னே கூறினார்.

 அதேநேரத்தில் அதிபர் சிறிசேன தலைமையிலான அரசு, அரசியல் பழிவாங்கும் செயலில் ஈடுபடுவதாக ராஜபக்ச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதிபர் சிறிசேனஆதாரங்கள்இலங்கை அரசுமனித உரிமை மீறல்ராஜபக்ச ஆட்சி
Comments (0)
Add Comment