விற்பனைக்காக இறக்குமதிச் செய்யப்பட்ட வாகனங்களில் சுமார் 13000 வாகனங்கள் மீள் ஏற்றுமதி செய்வதற்காக ஸ்ரீலங்காவின் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் இதுவே முதல் முறையாக அதிகளவான வாகனங்கள் மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில் இலங்கைக்கு அதிக எண்ணிக்கையான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதேவேளை வாகனப்பயன்பாடு அதிகரித்துள்ளதால் விபத்துக்கள் இடம்பெறும் நாடுகளில் முன்னணி இடத்தை ஸ்ரீலங்கா வகிக்கின்றது.