ராஜஸ்தானில் மின்சாரம் தாக்கி 5 தொழிலாளர்கள் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில், மின்சாரம் தாக்கி 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வைஷாலி நகரி உதவி போலீஸ் கமிஷனர் லகான் சிங் கூறுகையில்:-

தனியார் பண்ணை வீடு ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்ற பின்னர் தொழிலாளர்கள் பொருட்களை மாற்றி வைக்கும் பணியில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புகைபோக்கி ஒன்றினை எடுத்து சென்ற போது அது உயர் மின் அழுத்த கம்பியில் மோதியது. 11 ஆயிரம் கிலோவாட் அளவிலான மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்தது. இதனால் தொழிலாளர்கள் 5 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்கள்பலிமருத்துவமனைமின் அழுத்தம்மின்சாரம்ராஜஸ்தான்
Comments (0)
Add Comment