குறைடன் நோக்கிச் சென்ற டிராமே தெற்கு லண்டனில் உள்ள முக்கிய ஜங்சன் பகுதியில் இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக வாகனத்தின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகப் பிரிட்டீஸ் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.