லாஸ் ஏஞ்சல்ஸில் வீடில்லாத மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வீடில்லாத மக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் வீடற்ற சேவைகள் அதிகாரசபை (The Los Angeles Homeless Services Authority) வெளியிட்ட அறிக்கையில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீடுகளின் பற்றாக்குறையால், வீடற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 6 சதவிகிதம் உயர்ந்து, 46,874 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. வீடற்ற முன்னாள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மற்றும் வீடற்ற குடும்பங்களின் எண்ணிக்கை சிறிது குறைந்திருந்தாலும், லாஸ் ஏஞ்சல்ஸில் வீடற்றவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவதாக மேயர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதாவது சுமார் 34,527 பேர் வீடில்லாமல், கூடாரம் அமைத்தும், குடிசை வாழ் பகுதிகள் அல்லது வாகனங்களிலும் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மூத்த குடிமக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் வீடில்லாமல் தவிப்பதை தடுக்க விரிவான திட்டம் செயல்படுத்தப்படும். அதுவரை அவர்களுக்கு ‘குளிர்கால தங்குமிடம்’ ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றும் இந்த ஆண்டு எங்கள் பணிகளை இரட்டிப்பாகி இதனை செய்து முடிப்போம் எனவும் மேயர் தெரிவித்துள்ளார். வீடில்லாத பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும், லாஸ் ஏஞ்சல்ஸில் மலிவு விலையில் வீடுகள் கிடைப்பதில்லை என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

அதிகரிப்புஅதிகாரசபைஅதிகாரிகள்அமெரிக்காஎண்ணிக்கைமக்கள்லாஸ்ஏஞ்சல்ஸ்வீடற்ற சேவைகள்வீடு
Comments (0)
Add Comment