கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த மரணதண்டனை நிறைவேற்றங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேற்படி புகைப்படங்கள் லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலம்பெற்று விளங்கும் சிர்ட் நகரில் படமாக்கப்பட்டுள்ளது.
ரோமில் இடம்பெற்ற மேற்குலக நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் லிபியாவிலுள்ள ஐ.எஸ். தீவி ரவாதிகளுக்கு எதிராக நேரடி நடவடிக்கையை எடுப்பதற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி வலியுறுத்திய தினத்திலேயே இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றில் ஒரு புகைப்படத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த தீவிரவாதியின் அருகில் நபரொருவர் மரணதண்டனை நிறைவேற்றத்துக்குத் தயா ராக மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார்.
இரண்டாவது புகைப்படத்தில் பிறி தொருவர் சிலுவை போன்ற கட்டமைப்பில் கட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறார்.
அவரது உடல் முழுவதும் இரத்தமாகக் காணப்பட்டதுடன் அவரது உடலில் அவரை உளவு பார்த்த ஒருவராக குற்றஞ்சாட்டும் வாசகத்தைக் கொண்ட குறிப்பொன்று ஒட்டப்பட்டிருந்தது. அதேசமயம் மூன்றாவது புகைப்படத்தில் எதுவித குறிப்பும் ஒட்டப்படாமல் ஒருவர் சிலுவையில் கட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறார்.
சிலுவையில் கட்டப்பட்ட அந்த இருவரும் மேற்படி புகைப்படங்கள் எடுக்கப்பட்ட போது உயிருடன் இருந்தார்களா இல்லையா என்பது அறியப்படவில்லை.