லிபியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட வெளிநாட்டவர்கள் விடுவிப்பு!

லிபியாவில் நீண்ட காலம் ஆட்சி புரிந்து வந்த கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இதனால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கிளர்ச்சி படைகளால் கொலை செய்யப்பட்டார்.

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியாவிலும் செயல்பட்டு வருகின்றனர். மேலும், ஆயுதமேந்திய போராட்டக்காரர்களும் அரசுக்கு எதராக செயல்பட்டு வருகின்றனர்.

லிபியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள காட் என்ற பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந்தேதி இத்தாலியைச் சேர்ந்த இருவர் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் என மூன்று பேர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆயுதமேந்திய கும்பல் வாகனத்தை மறித்து அவர்கள் மூன்று பேரையும் கடத்திச் சென்றனர்.

இந்த நிலையில் நேற்றிரவு அவர்கள் மூன்று பேரையும் ஆயுதமேந்திய கும்பல் விடுவித்துள்ளது. அவர்கள் இன்று காலை இத்தாலிக்கு புறப்பட்டனர் என்று இத்தாலி நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்கள்தீவிரவாதிகள்பணயக்கைதிகள்லிபியாவிடுவிப்புவெளிநாட்டவர்கள்
Comments (0)
Add Comment