லிபியா -யோர்தான் நாடுகளுக்கு கனடாவின் உதவி தேவை – ஸ்டீபன் டியோன்

சிரியாவில் உள்நாட்டுப் போரின் அழுத்தங்கள் காரணமாக மோசமான நிலையில் உள்ள லிபியா மற்றும் யோர்தான் ஆகிய நாடுகளுக்கு கனடாவின் உதவி மேலும் தேவைப்படுவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன் தெரிவித்துள்ளார்.

அதனாலேயே கனடா அந்த நாடுகளுக்கான இராணுவ மற்றம் இராசதந்திர பிரசன்னத்தை அதிகரிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த பிராந்தியங்களில் ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் முன்னெடுககப்பட்டு வரும் கூட்டுப் படை நடவடிக்கையில் கனடாவின் ஒரு பங்களிப்பாக இதனை முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சில் ஆரம்பமாகவுள்ள நேட்டோ நாடுகளின் இரண்டு நாள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் கலந்துகொள்ளும் நிலையில், கனேடிய வெளிவிவகார அமைச்சு இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த விவகாரங்கள் தொடர்பில் ஏனைய நோட்டோ தலைவர்களுடன் கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர், ஆலோசனை நடாத்தும் முதலாவது கூட்டமாக இது அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

அழுத்தம்உதவிஉள்நாடுகனடாடியோன்போர்யோர்தான்லிபியாஸ்டீபன்
Comments (0)
Add Comment