லொறி ஒட்டியபடி ’போக்கிமோன் கோ’ விளையாடி விபத்து! ஒருவர் பலி

கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதே மாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கைபேசி விளையாட்டாக திகழ்ந்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர். இந்த விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் பலர் விபத்துகளில் சிக்குவதும் சகஜமாகி வருகிறது.

இந்நிலையில், ஜப்பானின் டோகுஷிமா பகுதியில் நேற்றுமாலை போக்கிமோன் கோ விளையாடியபடி லாரியை ஓட்டிவந்த ஒருவர், சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த மூன்று பேர் மீது லாரியை ஏற்றியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான செய்திகள் ஜப்பான் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் போக்கிமோன் கோ விளையாட்டை அறிமுகப்படுத்திய ’நியான்ட்டிக்’ நிறுவனம் இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை ஏதும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

’போக்கிமோன் கோ’கேம்கைதுசிறைஜப்பான்பலிலொறிவிபத்துவிளையாட்டு
Comments (0)
Add Comment