வங்கதேசத்தில் இந்து மத ஆசிரம பணியாளரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Nityaranjan Pande என்பவர் வங்கதேசத்தில் தாக்கூர் அனுகூல் சந்திர சஸ்டாங்க பரமதீர்த ஹேம்யேத்பூர்தம் ஆசிரமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இக்கொலைக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கு முன்பாக கடந்த 7ம் திகதி, இந்து மதத்தை சேர்ந்த நபர் படுகொலை செய்யப்பட்டார், இதற்கு ஐஎஸ்தீ விரவாதிகள் பொறுப்பேற்றனர். இதேபோன்று கிறிஸ்தவ தொழிலதிபர் ஒருவர் தேவாலயம் முன் தாக்கப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரையிலும் 30 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான குற்றங்களுக்கு அல்கொய்தா அல்லது ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்று கொள்கின்றனர், ஆனால் இதனை மறுத்துவிட்ட வங்கதேச அரசு குற்றங்களுக்கு உள்நாட்டு தீவிரவாதிகளே காரணம் என குற்றம் சுமத்தியுள்ளது.