பலர் குறைந்த செலவில் ஊருக்கு செல்லலாம் என்று சரக்கு லாரிகளில் தொற்றிக்கொண்டு சொந்த ஊருக்கு பயணமாகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் வடமேற்கு நகரமான ராம்பூரில் இன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லொறி சென்றுள்ளது. லாரியில் கூலித் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏறியுள்ளனர்.
சாலையின் வளைவில் லாரி திரும்பும் போது அங்கிருந்த சிறிய பள்ளத்தில் இறங்கியது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியிலிருந்த 11 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் பலியானவர்களின் 10 வயது சிறுமி உள்ளிட்ட 4 பெண்கள் அடக்கம். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.