குறிப்பாக சிறைகளை தகர்க்கும் அச்சுறுத்தல் உள்ளதால், அங்குள்ள 68 சிறைகளில் பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டு, உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி சிறைத்துறை ஐ.ஜி. பிரிகேடியர் ஜெனரல் சையத் இப்தகார் உதீன், டாக்காவில் நேற்று கூறுகையில், “சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறைகளுக்குள்ளும், வெளியேயும் கூடுதல் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
டாக்கா மத்திய சிறை அதிகாரிகள் கூறும்போது, “சிறையில் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளோம். சிறை வளாகத்திற்குள்ளும், வெளியேயும் கூடுதல் காவலர்களை பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் அமர்த்தி உள்ளோம்” என குறிப்பிட்டார்.
டாக்கா மத்திய சிறை கண்காணிப்பாளர் ஜகாங்கிர் கபீர் இதுபற்றி குறிப்பிடுகையில், “எங்கள் சிறையைப் பொறுத்தமட்டில் பார்வையாளர்கள் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. யார் வந்தாலும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். சிறை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரும் சுற்றித்திரிந்தால் பிடித்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது” என கூறினார்.