வடகொரியாவில் ராணுவ தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்

வடகொரியாவில் ஊழல் குற்றச்சாட்டின்பேரில் ராணுவ தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.    

கிம் ஜாங் அன் ஆட்சி  

வடகொரியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த கிம் ஜாங் இல் 2011–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28–ந் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது மகன் கிம் ஜாங் அன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். தனக்கு அடிபணியாதவர்களை, தவறு செய்கிறவர்களை, ஊழலில் ஈடுபடுகிறவர்களை அவர்கள் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி மரண தண்டனை விதித்து சுட்டுக்கொல்ல வைப்பது கிம் ஜாங் அன் வழக்கம்.

 ராணுவ தளபதி

அவர் பங்கேற்ற ராணுவ அணி வகுப்பு ஒன்றில் தூங்கி விட்டார் என்பதற்காக ராணுவ மந்திரி ஹயோன் யாங் சோல்லை பதவியை விட்டு நீக்கியதுடன், விமான எதிர்ப்பு பீரங்கியால் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்ல வைத்தார். இப்போது ராணுவ தளபதி ரி யாங் கில் அரசியலில் பிளவு ஏற்படுத்தியதுடன், ஊழலிலும் ஈடுபட்டார் என்று கூறி, அவருக்கும் கிம் ஜாங் அன் மரண தண்டனை விதித்து, அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டாலும், தகவல் இப்போதுதான் கசிந்துள்ளது.

அம்பலத்துக்கு வந்தது எப்படி?  

கிம் ஜாங் அன் எங்கு சென்றாலும், அவருடன் ராணுவ தளபதி ரி யாங் கில் உடன் செல்வது வழக்கம். சமீபத்தில் அங்கு கிம் ஜாங் அன் பங்கேற்ற நிகழ்ச்சி எதிலும் அவர் இல்லை.  வடகொரியா செயற்கைக்கோளை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியபோது, நடந்த வெற்றி கொண்டாட்டங்களிலும் அவர் இல்லை. இதையடுத்து அவர் என்ன ஆனார் என்ற கேள்வி எழுந்தது. அதைத் தொடர்ந்துதான் இப்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

தளபதியைரகசியமாககொன்றுவிட்டதாகதென்கொரியாகுற்றம்சாட்டியுள்ளது

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஐதரசன் குண்டு பரிசோதனை, கண்டம்விட்டு கண்டம் பாயும் நெடுந்தூர நவீன ஏவுகணை பரிசோதனை என அடுத்தடுத்து அத்துமீறல்களில் ஈடுபட்டுவரும் வடகொரியா அந்நாட்டின் இராணுவ தலைமை தளபதியை ரகசியமாக கொன்று விட்டதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

பிரபல செய்தி நிறுவனங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின்படி, இலஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதால் கொரியா மக்கள் இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்த ரி யாங் கில்-லுக்கு சமீபத்தில் ரகசியமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

வடகொரியாவின் ஜனாதிபதியாக இருக்கும் கிம் ஜாங் உன் இன் மாமாவான ஜங் சாங் தாயேக் என்பவர் முன்னாள் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தின்போது நாட்டிலேயே இரண்டாவது அதிகார மையமாக கருதப்பட்டார். இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இராணுவம்ஊழல்ஐதரசன்குற்றம்சுட்டுக்கொலைதளபதிபரிசோதனைவடகொரியா
Comments (0)
Add Comment