வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை தோல்வி – அமெரிக்கா

எதிர்ப்புகளை மீறி வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.  உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமலும், சர்வதேச உடன்படிக்கைகளை கண்டுகொள்ளாமலும், பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வடகொரியா அணுகுண்டு சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

இதனால் அங்குள்ள தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் கயூம் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. பல்வேறு தரப்பு எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடையை மீறி அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.   இதற்கிடையே மீண்டும் ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயாரானது செயற்கைகோள் போட்டோ மூலம் தெரியவந்தது. அதன்படி நேற்று  வடகொரியா ‘முசுதான்’ என்ற நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வீசி சோதனை நடத்தியுள்ளது.

இச்சோதனை வட கொரியாவின் வடமேற்கு நகரமான குசாங் அருகே அதிகாலை 3.33 மணிக்கு நடைபெற்றுள்ளது. இது 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கக் கூடியது. இது தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் கயூம் பகுதிகளை தாக்கும் திறன் கொண்டது. ஆனால் இந்த சோதனை தோல்வி அடைந்தது. இதை அமெரிக்க ராணுவம் கண்டுபிடித்து அறிவித்துள்ளது. இதை தென்கொரியாவும் உறுதி செய்துள்ளது. அதே நேரம் அண்டை நாட்டின் இத்தகைய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது.

இந்த ‘மசுதான்’ ஏவு கணையை வடகொரியா இந்த ஆண்டில் மட்டும் 6 தடவை பரிசோதித்துள்ளது. ஆனால் 4 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கக் கூடிய இந்த ஏவுகணை 1000 கி.மீட்டர் தூரம் மட்டுமே பாய்ந்தது. தொடர்ந்து வடகொரியா தோல்வியை தழுவி வருகிறது.

எதிர்ப்புஏவுகணைசோதனைதோல்விமீறுதல்வடகொரியா
Comments (0)
Add Comment