ஹைட்ரஜன் குண்டு சோதனை எதிரொலியாக வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார்.
ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்ததாக வட கொரியாவின் அறிவிப்பு, உலக நாடுகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு, அதன் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவும் கண்டனம் தெரிவித்தன. மேலும், ஐ.நா.வின் தடையையும் மீறி நடத்தப்பட்ட இந்த சோதனைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், ஹைட்ரஜன் குண்டு சோதனை எதிரொலியாக வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த தகவலை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதன் மூலம் வடகொரியாவிற்கு பேரழிவு தொடர்பான தொழில்நுட்ப பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அணுகுண்டு சோதனை, மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கை, சைபர் கிரைம் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்படுதாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.