வட கொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை: தென் கொரியா கண்டனம்

ஜப்பானைப் போலவே தென் கொரியாவும் வட கொரியாவின் ஹைட்ரஜன் குண்டுவெடிப்புச் சோதனைக்கு  கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளதாக அறிவித்ததை அடுத்து பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து விவாதிக்கும் பொருட்டு தென் கொரியா வெளியுறவுத்துறையின் அவசரக் கூட்டம் சியோலில் நடந்தது.

 இந்தக் கூட்டத்தில் பேசிய தென் கொரிய துணை வெளியுறவு அமைச்சர் வட கொரியாவின் செயலானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தீர்மானங்களுக்கு எதிரானது என்றும் இத்தகைய சோதனைகள் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் ஊறு விளைவிக்கக் கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சோதனைதென் கொரியா கண்டனம்வட கொரியாஹைட்ரஜன் குண்டு
Comments (0)
Add Comment