இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுப்பதால், ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைகள் நிறுத்தப்படாது என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் விசாரணைக்குழு, இலங்கைக்கு வர வீசா வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று அறிவித்திருந்தார். இந்தநிலையில் இலங்கைக்குள் செல்ல தமது குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், இணையத்தள வசதிகளுடனும் செய்மதி வசதிகளுடனும் விசாரணைகளை நம்பகத்தன்மையுடன் முன்னெடுக்க முடியும் என்று நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்
சிரியாவில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும், அந்த நாட்டில் முறையான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்க முடிந்ததாக நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.