வெனிசுலா சிறையில் உண்ணாவிரதமிருந்த கைதிகள் மரணம்

வெனிசுலாவின் லாரா மாநிலத்தில் யுரிபனா சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள கைதிகளை, சிறை அதிகாரிகளும், காவலர்களும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து கைதிகள் அனைவரும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் 17 பேர் திடீரென உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், கைதிகள் பயன்படுத்திய மருந்து பொருளில் விஷம் கலந்திருந்ததால் அவர்கள் இறந்ததாக தெரிவித்து உள்ளனர். ஆனால் எவ்வாறு மருந்து பொருளில் விஷம் கலந்தது என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

 

உண்ணாவிரதம்கைதிகள்சிறைதுன்புறுத்தல்பொருள்மரணம்மருந்துவெநிசு வெலா
Comments (0)
Add Comment