எஸ்.சி.ஓ எனப்படும் ஷாங்கை ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு உஸ்பெஸ்கிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் இன்று நடைபெறுகின்றது.
எஸ்சிஓ அமைப்பில் 6 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று அவர்களுடன் உரையாற்ற உள்ளார். மேலும் மோடி, சீன குடியரசுத் தலைவர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷியன் குடியரசுத் தலைவர் விளாடிமிர் புட்டின் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். அப்போது அவரிடம் அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்துவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.