விவேகானந்தரின் பிறந்தநாள் கொண்டாட்டம், சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 5 நாட்கள் நடைபெற உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும்பொருட்டு ஸ்டார்ட்அப் இந்தியா ஸ்டாண்ட்அப் இந்தியா என்ற பெயரில் புதிய திட்டம், ஜனவரி மாதம் துவங்கப்பட உள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையில் ஸ்டார்ட் அப் திட்டம் என்ற நோக்கில் மட்டுமல்லாது, அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். ஸ்டார்ட் அப் இந்தியா ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம், இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு உருவாகும் என்று கூறினார்.
மேலும் விரைவில் நடைபெற உள்ள இளைஞர் திருவிழாவிற்காக யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. யோசனைகளை தெரிவிக்க விரும்புவோர்களின் வசதிக்காக, நரேந்திர மோடி மொபைல் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர் திருவிழாவில், நாடெங்குமிலும் இருந்து 10 ஆயிரம் இளைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எழுமின் விழுமின் திட்டம் ( ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேன்ட் அப் இந்தியா திட்டம் ) என்ற இந்த திட்டம் மூலம் இளைஞர்களுக்கு பெரும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஏழை இளைஞர்கள் மிக பயன் அடைவர் என்று கூறினார்.
நாட்டில் தூய்மை நடவடிக்கைகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும். நாட்டின் தூய்மை கருதி 100 டாய்லெட்களை கட்டிய திலிப் சிங் மாளவியாவிற்கு இந்த தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.