கனடாவில் இரண்டு சிறைக்கைதிகள் ஹெலிகொப்டர் உதவியுடன் தப்பித்து சென்ற வீடியோ காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் Quebec மாகாணத்தில் உள்ள Saint Jerome தடுப்பு மையத்தில் கடந்த 2013 ஆம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. Hudon-Barbeau(38) என்ற நபர் கொலைக்குற்றத்திற்காக சிறைதண்டனை பெற்றவர் ஆவர், இந்நிலையில் இந்நபர் மற்றும் இவருடன் சேர்ந்து தண்டனை அனுபவித்து வரும் மற்றொரு நபரும் இந்த தடுப்பு மையத்தில் இருந்து தப்பிப்பதற்காக கைப்பேசி வாயிலாக ஹெலிகொப்டர் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, தடுப்பு மையத்தில் உள்ள கட்டிட சுவரில் மேற்புறத்தில் ஹெலிகொப்டர் வந்து நின்றவுடன், கயிற்றினை பயன்படுத்தி இருவரும் மேலே ஏறிச்சென்று தப்பிக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர்களால் மேலே ஏறமுடியவில்லை.
இருப்பினும் ஹெலிகொப்டர் விடாப்பிடியாக முயற்சி செய்து அவர்களை ஏற்ற முயற்சிக்கிறது, ஆனால் இவர்களால் ஏற முடியாத காரணத்தால், Hudon-Barbeau விமானியை மேல் எழும்பி பறக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, ஹெலிகொப்டரும் பறக்க, இவர்களும் கயிற்றில் தொங்கியபடி தப்பித்து சென்றுள்ளனர். இவர்கள் தப்பித்த செய்தி 2013 ஆம் ஆண்டு கனடாவின் தலைப்பு செய்திகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிகள் அனைத்தையும் தடுப்பு மைய காவலர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து Quebec சீர்திருத்த சேவைகள் மையத்தலைவர் கூறியதாவது, கைதிகள் தப்பித்து செல்லும்போது பாதுகாவலர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை, ஏனெனில் திரைப்படங்களில் நடப்பது போன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், கைதிகளின் கையில் ஆயுதங்கள் உள்ளதா? இந்த திட்டத்தின் பின்னணி என்ன? என்பதை குறித்து ஆராய வேண்டியிருந்ததால், கைதிகளை தப்பிக்க விட்ட சில மணி நேரங்களில் காரில் பின் தொடர்ந்து சென்று அவர்களை கைது செய்துவிட்டோம் என்று கூறியுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு இக்கைதிகள் தப்பித்த செய்தி மற்றும் இவர்களை மீண்டும் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானாலும், இவர்கள் எவ்வாறு தப்பித்தார்கள் என்பது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=Q0wo7Poavm0″ width=”560″ height=”315″]