நேற்று ஹரியானா மாநிலத்தின் கர்னல் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மனோகர் லால் கட்டார், ’12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளை தூக்கில் போட வகை செய்யும் விதத்தில் புதிய சட்டம் மாநில அரசால் விரைவில் இயற்றப்படும் என்றும் அதே சமயம் கற்பழிப்பு சம்பவங்களின் உண்மை தன்மையை உறுதி செய்த பின்னரே இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
ஒருபுறம் சிறுமிகளின் கற்பழிப்பு சம்பவம் அதிகரித்து வந்தாலும் போலியான கற்பழிப்பு புகார்களில் அப்பாவிகளும் சிக்குகின்றனர் என்பதும் கடந்த ஆண்டில் பதிவான கற்பழிப்பு புகார்களில் 25 சதவீதம் பொய்யானவை என்று கண்டறியப்பட்டதே இதற்கு சான்று என்பதும் குறிப்பிடத்தக்கது.