2008 ஆம் வருடம் உலகின் பிற நாடுகளில் இருந்த முஸ்லிம் மத போதகர்கள் சிலர் அபுபக்கரின் விந்தை திருமணங்களுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர் உடனடியாக தனது 86 மனைவிகளில் 82 பேரை விவாகரத்து செய்து விட்டு 4 மனைவிகளோடு மட்டும் வாழ வேண்டும் என பிற மத போதகர்கள் நிர்பந்தித்தனர். ஆனால் அபுபக்கர் அவர்களது நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்து விட்டதோடு தனது திருமணங்கள் அனைத்துமே தனது வாழ்நாளில் தன்னால் செய்ய முடிந்த ‘தெய்வீகப் பணிகள்’ என்று கூறி பிறரது விமர்சனங்களைப் புறம் தள்ளினார். தற்போது தனது 93 வயதில் அபுபக்கர் இயற்கை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு 130 மனைவிகள் மூலமாக 203 குழந்தைகள் இருப்பதாகவும், மனைவிகளில் சிலர் கர்ப்பிணிகளாக இருக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.