4 வயது தம்பியை 6 வயது சகோதரன் துப்பாக்கியால் சுட்டு கொலை

அமெரிக்க நாட்டில் 4 வயது தம்பியை 6 வயது சகோதரன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூ ஜெர்ஸி நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 4 மற்றும் 6 வயதுள்ள இரு பிள்ளைகளுடன் பெற்றோர் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் தாயார் வீட்டிற்குள் இருந்த நிலையில் பிள்ளைகள் இருவரும் வெளியே சென்று விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். சில நிமிடங்களுக்கு பிறகு திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு தாயார் அலறியடித்து ஓடியுள்ளார்.

அப்போது, தனது 4 வயது மகன் தலையில் பலத்த குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். எதிரே மூத்த சகோதரனின் கையில் துப்பாக்கி இருந்துள்ளது. மயங்கிய நிலையில் இருந்த மகனை தாயார் அவரசமாக தூக்கி சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், காயம் ஆழமாக பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும்,சிறுவர்களின் கையில் துப்பாக்கி எப்படி சென்றது என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிய குற்றத்திற்காக பொலிசார் 22 வயதான தாயாரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்ணன்அமெரிக்காசுட்டுக்கொலைதம்பிதுப்பாக்கிநாடுவிளையாட்டு
Comments (0)
Add Comment