5 பேரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்த தொழிலாளி!

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் ஆர்லாண்டோ நகர் அருகே தொழிற்சாலைகளும், சேமிப்பு கிடங்குகளும் நிறைந்த பகுதி உள்ளது. நேற்று அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில், 45 வயதான மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் நுழைந்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.

அந்த ஆத்திரத்தில், தன்னுடைய முன்னாள் சக ஊழியர்கள் மீது அவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில், ஒரு பெண் ஊழியர் உள்பட 5 பேர் பலியானார்கள். பின்னர், அந்த நபர், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயரை போலீசார் வெளியிடவில்லை. இதற்கும், பயங்கரவாதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

அமெரிக்காகொலைதற்கொலைதொழிற்சாலைபுளோரிடா
Comments (0)
Add Comment